தஞ்சை மாவட்டத்தில் நேற்று மாலை சில இடங்களில் மழை பெய்தது. தஞ்சையில் நேற்று மாலை முதல் இரவு வரை தூறல் மழை பெய்தது. திருவையாறு, பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர் ஆகிய இடங்களிலும் நேற்று மழை பெய்தது. இன்று காலையும் வானம் கறுத்து மேகமூட்டமாக இருந்தது. இதைத்தொடர்ந்து தூறல் மழை பெய்து வருகிறது. இதனால் காலை நேரதத்தில் பணிகளுக்கு செல்பவர்கள் குடைபிடித்து சென்றனர்.
திருவாரூர் மாவட்டத்திலும் நேற்று இரவு மழை பெய்தது. திருவாரூர், மன்னார்குடி, நீடாமங்கலம், கொரடாச்சேரி உள்பட மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.
நாகை மாவட்டத்திலும் நேற்று தூறல் மழை பெய்தது. நாகை, வேதாரண்யம், தலைஞாயிறு, மயிலாடுதுறை ஆகிய இடங்களிலும் மழை பெய்தது. இந்த மழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் வெப்பம் தணிந்து குளிர்காற்று வீசிகிறது. குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் இந்த மழை பயிரின் வளர்ச்சிக்கு உதவும் என்பதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.