பேராவூரணி அருகே சாலை செப்பனிடும் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பேராவூரணி அருகே உள்ள துறவிக்காடு கடைவீதி சாலையை செப்பனிடும் பணி கடந்த 2 மாதங்களுக்கு முன் துவங்கியது. 2 கிமீ தூரம் கடைவீதியில் சாலை முழுவதும் பெயர்க்கப்பட்டு கருங்கல், ஜல்லி மற்றும் கலவைகள் சாலையில் போடப்பட்டது. அதன்பிறகு எவ்வித பணிகளும் நடக்கவில்லை. இந்த துறவிக்காடு சாலையில் பட்டுக்கோட்டை, காரைக்குடி, புதுக்கோட்டை, மதுரை, பேராவூரணி ஊர்களுக்கு தினம்தோறும் 500க்கும் அதிகமான வாகனங்கள் சென்று வருகிறது.
சாலை செப்பனிடும் பணி நிறுத்தப்பட்டதால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வந்தனர்.
சாலை பணிகளை விரைந்து முடிக்கக்கோரி கிராம மக்கள் கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் சாலை செப்பனிடும் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி துறவிக்காடு கடைவீதியில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். பட்டுக்கோட்டை இன்ஸ்பெக்டர் சிங்காரவேல், திருச்சிற்றம்பலம் சப்இன்ஸ்பெக்டர் ஞானசுமதி மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விரைந்து பணிகள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர்.
இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.