பேராவூரணி அடுத்த கோட்டாகுடி மனோரா பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் அனைத்து துறையை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு தொழில்நுட்ப சிறப்பு கருத்தரங்கம் நடந்தது. சிவில்டெக் இயக்குநர் பாலசந்திரன், டூல் மற்றும் டை இன்ஸ்டிடியூட் பேராசிரியர்கள் ஆரோக்கியராஜ், ஆரோக்கிய ஜஸ்டின்ராஜ், திண்டுக்கல் மின்சார வாரிய உதவியாளர் தட்சிணாமூர்த்தி, பெல் நிறுவன துணை பொறியாளர் முத்துக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த கருத்தரங்கின் மூலம் மாணவ, மாணவிகள் தொழில்நுட்ப ரீதியான சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றனர். மேலும் எதிர்காலத்தில் மாணவர்கள் தொழிற்சாலைகளில் எவ்வாறு பணியாற்றுவது போன்ற தகவல்களும் அளிக்கப்பட்டது.
கருத்தரங்கு பயனுள்ளதாக அமைந்ததாக மாணவ, மாணவிகள் தெரிவித்தனர்.