பேராவூரணி செருவாவிடுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் சாணாகரையில் நடந்த டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பேரணிக்கு ஒன்றியக்குழு தலைவர் சாந்திஅசோக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட மலேரியா அலுவலர் பிச்சை, வட்டார சுகாதார அலுவலர் டாக்டர் சவுந்தர்ராஜன், பைங்கால் ஊராட்சித் தலைவர் பழனிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணியில் பைங்கால் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி கிராமத்தின் வீதிகளில் சென்றனர்.
பின்னர் ஊரக வேலை வாய்ப்பு திட்ட பணியாளர்களுக்கு டெங்கு கொசு ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. தொடர்ந்து சாணாகரை கிராமத்தினை முழுமையாக சுத்தம் செய்யும் பணியும், புகை மருந்து அடிக்கும் பணியும் நடந்தன.
ஊராட்சியில் உள்ள அனைத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் சுத்தம் செய்யப்பட்டு குளேரினேசன் செய்யப்பட்டது. தொடர்ந்து நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. முகாமில் சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.