பேராவூரணி நீலகண்டப் பிள்ளையார் கோவில் வைர தேர் செல்வதற்கு சாலை அமைக்க வேண்டும் என .சட்டப்பேரவையில் பேராவூரணி தொகுதி MLA திரு மா.கோவிந்தராசு அவர்கள் கோரிக்கை.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி நீலகண்டப் பிள்ளையார் கோவில் வைரத் தேதோட்டத்துக்கு சாலை அமைக்க வேண்டும் என சட்டப்பேரவையில் பேராவூரணி உறுப்பினர் மா.கோவிந்தராசு அண்னையில் கோரிக்கை விடுத்தார்.
அவர் பேசுகையில் பேராவூரணி நகரின் மையத்தில் அமைந்திருக்கும் நீலகண்டப் பிள்ளையார் கோவிலுக்கு வைரத்தேர் செய்யப்பட்டுள்ளது. அந்தத் தேர் ஓடுவதற்கு தார்ச் சாலையோ அல்லது சிமென்ட் சாலையோ அமைத்துத் தரவேண்டும்.
***பேராவூரணி தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் சுமார் 2.5 லட்சம் மக்கள் வசிக்கும் நிலையில் தொழிற்கல்வி பயில 80 கி.மீ தொலைவில் உள்ள தஞ்சாவூருக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே மாணவர்கள் நலன் கருதி அரசு தொழில்நுட்பக் கல்லூரி அமைத்துத்தர வேண்டும்.
***குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அமைக்க வேண்டும்.
***திருச்சிற்றம்பலத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டம் ஏற்படுத்த வேண்டும்.
***பேராவூரணி அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும்.
பேராவூரணி தொகுதி 32 ஆண்டுகளுக்குப் பிறகு ஆளுங்கட்சியின் வசம் வந்துள்ளது. எனக்கு வாக்களித்த பேராவூரணி தொகுதி மக்களுக்கு, வாய்ப்பளித்த தமிழக முதல்வருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்..