கொப்பரைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயிக்ககோரி தென்னை விவசாயிகள் பேராவூரணியில்
ஆர்ப்பாட்டம்
Unknown
ஆகஸ்ட் 06, 2016
0
பேராவூரணி கொப்பரை ஒரு கிலோவுக்கு ரூ.100 என குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்ககோரி பேராவூரணியில் தென்னை விவசாயிகள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கொப்பரை ஒரு கிலோவுக்கு ரூ.100 என குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும். உரித்த தேங்காயை அரசே கொள்முதல் செய்ய வேண்டும். சத்துணவு மையங்களில் தேங்காய் எண்ணெய் உபயோகப்படுத்த வேண்டும். பேராவூரணியில் தென்னை வணிக வளாகம் அமைக்க வேண்டும். தென்னை மதிப்பு கூட்டுப் பொருட்களை தயாரித்து வெளிநாட்டிற்கு அனுப்பும் ஒப்பந்தத்தை புதுப்பிப்பதோடு புதிய ஒப்பந்தங்கள் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பேராவூரணி அண்ணாசிலை அருகே தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு விவசாய சங்க செயலாளர் நீலகண்டன் தலைமை வகித்தார். விவசாய சங்க மாவட்ட செயலாளர் சாமி நடராஜன் கோரிக்கைகள் குறித்து விளக்கவுரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர்கள் பேராவூரணி குமாரசாமி, சேதுபாவாசத்திரம் வேலுச்சாமி, விவசாய சங்க மாவட்ட குழு உறுப்பினர், கருப்பையா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.