பேராவூரணி சேதுபாவாசத்திரம் வட்டார வளமையம் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு படைப்பாற்றல் வழி கற்றல், கற்பித்தல் பயிற்சி அளிக்கப்பட்டது. சேதுபாவாசத்திரம் வட்டார வளமையம், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் ஒன்றியத்திற்கு உட்பட்ட உயர்தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு படைப்பாற்றல் வழி கற்றல் மற்றும் கற்பித்தல் வலுவூட்டல் பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சிகள் குருவிக்கரம்பை வளமைய அலுவலகம், பள்ளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட 3 மையங்களில் நடைபெற்றது. பயிற்சியினை வட்டார வளமைய மேற்பார்வையாளர் டேவிட் சார்லஸ் தொடங்கி வைத்து, சுய கற்றலின் மூலம் பள்ளி மாணவர்களிடம் வெளிப்படும் தேடல், கண்டறிதல், தேர்ந்தெடுத்தல், கலந்துரையாடல், தொகுத்து வழங்குதல் திறன் மேம்பட்டிருக்கின்றனவா என்பன குறித்து விளக்கி கூறினார்.
தொடர்ந்து ஆசிரியர்கள் கற்றல் படிநிலைகளில் எவ்வாறு புதுமைகளையும், தொடர்மதிப்பீடுகளையும் கையாள வேண்டும், படிநிலைகளின் திறன்மேம்பாட்டு யுக்திகளை வகுப்பறையில் சிறப்பாக செயல்படுத்தலாம் என்பன தொடர்பான பயிற்சிகள், கலந்துரையாடல் செயல்பாடுகள் நடைபெற்றன. பயிற்சியினை உதவி தொடக்கக்கல்வி அலுவலர் சிவசாமி பார்வையிட்டார். கருத்தாளர்களாக ஆசிரிய பயிற்றுனர்கள் அரங்கசாமி, சிவா, சிவசுப்பிரமணியன், ரமேசு, மகேஸ்வரன், நஸ்ரின்பேகம், ஆசிரியர் அருணாச்சலம் ஆகியோர் செயல்பட்டனர்.