நேரடி நெல் விதைப்பு மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு 10 ஆண்டுகளுக்கு உட்பட்ட நெல் ரகங்களுடன் மற்ற இடுபொருட்களும் விலையில்லாமலும் விதைப்பு கருவி கொண்டு விதைப்பிற்கான தொகை பின்னேற்பு மான்யமாகவும் வழங்கப்பட உள்ளது. இயந்திர நடவு மேற்கொள்ளும் அனைத்து விவசாயிகளுக்கும் சம்பா பருவத்தில் ஏக்கருக்கு ரூ. 2 ஆயிரம் பின்னேற்பு மான்யமாக வழங்கப்பட உள்ளது. நடவுக்கு முன் பசுந்தாள் உரப்பயிர்கள் பயிரிடும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.
600 பின்னேற்பு மான்யமாக வழங்கப்படும். இதைத்தவிர நெல் வரப்பில் உளுந்து பயிரிட 2 கிலோ உளுந்து விதை ரூ. 150 மான்யத்தில் வழங்கப்பட உள்ளது. மேலும் பண்ணை இயந்திரங்கள் ரோட்டோ வேட்டர், பவர்டில்லர் மற்றும் 20எச்பி டிராக்டர் முதலியன மான்ய விலையில் வழங்கப்படும்.
எனவே வேளாண்மைத் துறை மூலம் வழங்கப்படும் மான்யங்களைப் பெற தங்கள் பகுதி உதவி வேளாண் அலுவலர்களை அணுகி முன்பதிவு செய்து அரசின் சலுகைகளை பெற்று விவசாயத்தை பெருக்கிட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.