அணைக்கரை கொள்ளிடம் பாலத்தில் நாளை முதல் போக்குவரத்து நிறுத்தம் உதவி செயற்பொறியாளர் தகவல்
கும்பகோணம் அருகே அணைக்கரையில் கொள்ளிடம் ஆற்றின் உயர்மட்ட பாலம் மிகவும் பழமை வாய்ந்தது. இந்த பாலத்தின் தெற்கு பகுதயில் உள்ள எண் 1 முதல் 8 வரையிலான கண்வாய்க்களல் பொருத்தப்பட்டுள்ள இரும்பு தூண்கள் பொருத்தி பல ஆண்டுகள் ஆனதால் அரிப்பு ஏற்பட்டு உடையும் நிலையில் உள்ளது. எனவே அவற்றை புதிதாக மாற்றுவதற்காக பணிகள் நடைபெற்று வருகிறது. இதை முன்னிட்டு அணைக்கரை கொள்ளிடம் பாலத்தில் நாளை(ஞாயிற்றுக்கிழமை) முதல் அடுத்தமாதம் (செப்டம்பர்) 5–ந்தேதி வரை பஸ் போக்குவரத்து, கனரக வாகனங்களின் போக்குவரத்து தடை செய்யப்படுகிறது. மேலும் பணியின் அவசிய, அவசரத்தை கருதி கனரக மற்றும் பஸ் போக்குவரத்து நாளை முதல் அணைக்கரை பாலத்தில் நிறுத்தப்படும். இந்த தகவலை பொதுப்பணித்துறையின் நீர் ஆதாரத்துறை கீழணை கொள்ளிட வடிநில உபகோட்டத்தின் உதவி செயற்பொறியாளர் பி.கே.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.