காவிரி பிரச்னை தொடர்பாக நடக்கும் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவிக்கும்வகையில் தமிழகத்தில் வரும் 16-ல் பெட்ரோல் பங்குகள் மூடப்படும் என்று தமிழ்நாடு பெட்ரோல் பங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
காவிரி பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வரும் 16-ல் முழு அடைப்பு போராட்டத்துக்கு விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. இந்த முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவிக்கும்வகையில் தமிழகத்தில் வரும் 16ஆம் தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பெட்ரோல் பங்குகள் மூடப்படும் என்று தமிழ்நாடு பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் முரளி தெரிவித்துள்ளார். இந்த முழு அடைப்பு போராட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள 4,600 பெட்ரோல் பங்குகள் பங்குபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.