தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் உள்ளாட்சி தேர்தல் 2016 க்கான வாக்காளர் பட்டியல் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் இன்று (19.09.2016) வெளியிட்டார்.
தஞ்சாவூர் மாநகராட்சியில் 91,552 ஆண் வாக்காளர்களும், 97,243 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினம் 4 வாக்காளர்களும் என மாநகராட்சியில் மொத்தம் 1,88,799 வாக்காளர்கள் பட்டியலில் உள்ளனர்.
இரண்டு நகராட்சிகளில் 79,593 ஆண் வாக்காளர்களும், 83,080 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினம் 18 வாக்காளர்களும் என நகராட்சியில் மொத்தம் 1,62,691 வாக்காளர்கள் பட்டியலில் உள்ளனர். 22 பேரூராட்சிகளில் 1,15,873 ஆண் வாக்காளர்களும், 1,19,912 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினம் 1 வாக்காளர் என மொத்தம் 2,35,786 வாக்காளர்கள் பட்டியலில் உள்ளனர். 14 ஊராட்சி ஒன்றியங்களிலும் 6,43,099 ஆண் வாக்காளர்களும், 6,60,087 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினம் 31 வாக்காளர்களும் என மொத்தம் 13.03,217 வாக்காளர்களும் பட்டியலில் உள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் வாக்காளர் பட்டியலில் 9,30,117ஆண் வாக்காளர்களும், 9,60,322 பெண் வாக்காளர்களும் மூன்றாம் பாலினம் 54 வாக்காளர்களும், என மொத்தம் 18,90,493 வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் உள்ளனர்.
மாநகராட்சியில் 159 வாக்குச்சாவடி மையமும், நகராட்சியில் 178 வாக்குச்சாவடி மையங்களும், பேரூராட்சியில் 368 வாக்குச்சாவடி மையங்களும், ஊராட்சி ஒன்றியங்களில் 2679 வாக்குச்சாவடி மையங்களும், என தஞ்சாவூர் மாவட்டத்தில் 3384 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்படவுள்ளன.
வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பெ.சந்திரசேகரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மந்திராசலம், மாநகராட்சி ஆணையர் வரதராஜன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.