சேதுபாவாசத்திரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நடந்த ஊழலை கண்டித்து வரும் 23ம் தேதி முழு கடையடைப்பு, மறியல் போராட்டம் நடத்துவது என்று கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் தமிழக அரசு அறிவித்த விவசாய கடன் தள்ளுபடியில் ரூ.67 லட்சம் மோசடி நடந்திருப்பதாக விவசாயிகள் தரப்பில் கூறப்பட்டு கடந்த 10 நாட்களுக்கு முன் நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டம் நடந்தது.
இதைதொடர்ந்து கடந்த 10 நாட்களாக சேதுபாவாசத்திரம் அலுவலகத்தில் தஞ்சை கூட்டுறவு சங்க உயர் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
இதில் முறைகேடு நடந்தது கண்டு பிடிக்கப்பட்டு கூட்டுறவு சங்க செயலாளர் செல்வராஜ் மற்றும் பணியாளர்கள் பெத்தபெருமாள், நீலகண்டன் உள்ளிட்டோர் பணிநீக்கம் செய்யப்பட்டு புதிய செயலாளராக அனிதா பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில் சேதுபாவாசத்திரம் சமுதாய நலக்கூடத்தில் சேதுபாவாசத்திரம், துறையூர், ரகுநாயகிபுரம், நாயகத்திவயல், மரக்காவலசை, கொடிவயல், ராவுத்தன்வயல், மறவன்வயல் உள்ளிட்ட 8 வருவாய் கிராமங்களை சேர்ந்த கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் கூட்டம் சங்க தலைவர் கோவிந்தராசு தலைமையில் நடந்தது. செயலாளர் பாலசுப்பிரமணியன், பொருளாளர் சிவசாமி முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நடந்த முறைகேட்டுக்கு சங்க அலுவலர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்க தலைவர் செல்வக்கிளி மற்றும் நிர்வாகிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வரும் 23ம் தேதி சேதுபாவாசத்திரத்தில் முழு கடையடைப்பு நடத்துவது. கிழக்கு கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபடுவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இவ்வாறு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சரபோஜி கூறினார்.கும்பகோணம்: கும்பகோணம் பழைய பாலக்கரை கள்ளர் புதுத்தெருவை சேர்ந்தவர் ராமதாஸ் (65). இவரிடம் நாகேஸ்வரன் கோயில் சன்னதியில் உள்ள கூட்டுறவு நகர வங்கி நகை மதிப்பீட்டாளர் அசோகன் (49) என்பவர் 2012ம் ஆண்டு நவம்பர் 25ம் தேதி ரூ.60 ஆயிரத்தை கடனாக வாங்கினார்.
அந்த கடனை திரும்ப செலுத்துவதற்காக ராமதாசிடம் தான் வேலை பார்க்கும் கூட்டுறவு நகர வங்கி காசோலையை 2016ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதியிட்டு அசோகன் கொடுத்தார். இதையடுத்து அந்த காசோலையை கும்பகோணம் டவுன் சிட்டி யூனியன் வங்கியில் 2012ம் ஆண்டு டிசம்பர் 29ம் தேதி ராமதாஸ் செலுத்தினார். அசோகன் வங்கி கணக்கில் போதிய பணமில்லையென அந்த காசோலை திரும்பி வந்துவிட்டது. இதனால் கும்பகோணம் கோர்ட்டில் ராமதாஸ் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை நேற்று முன்தினம் நடந்தது. வழக்கை விசாரித்து அசோகனுக்கு 3மாத சிறை தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி செல்லபாண்டி தீர்ப்பு வழங்கினார்.