தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தலுக்காக பயன்படுத்தப்படும் மின்னணு இயந்திரங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் நேரில் ஆய்வு செய்தார்.
தஞ்சாவ10ர் மாவட்டத்தில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை பாதுகாப்பு அறையில் இருப்பில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மொபைல் டிராக்கிங் முறையில் கணக்கிடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது மின்னணு பாதுகாப்பு அறையில் உள்ள 4395 வாக்குப்பதிவு கருவிகளும், 346 கட்டுப்பாட்டு கருவியும் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது. 345 (VVPAT) யாருக்கு வாக்கும் அளித்தோம் என்பதை காண்பிக்கும் இயந்திரங்களும் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது. வரும் உள்ளாட்சி தேர்தல் பணிகளுக்காக 2755 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளது.
இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் ஜெய்பீம், தேர்தல் வட்டாட்சியர் ராமலிங்கம் ஆகியோர் உடன் உள்ளனர்.