தஞ்சை கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மையத்தில் வரும் 28ம் தேதி நாட்டுக்கோழி வளர்ப்பு மற்றும் முதலுதவி பயிற்சி தொடங்கி நடைபெறுகிறது என்று தலைவர் புண்ணியமூர்த்தி தெரிவித்துள்ளார். தஞ்சை புதிய கலெக்டர் அலுவலகம் எதிரே கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் இயங்கி வருகிறது. இந்த மையத்தில் வருகிற 28ம் தேதி மற்றும் 29ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் நாட்டுக்கோழி வளர்ப்பு மற்றும் முதலுதவி மூலிகை தொடர்பான பயிற்சி நடக்கிறது. இந்த பயிற்சி காலை 9 மணிக்கு துவங்கி நடைபெறும். இந்த பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புவோர் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையுடன் நேரில் வர வேண்டும்.
இதுபற்றி கூடுதல் தகவல்அறிய 04362204009 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.