தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களும் தாங்கள் வாக்களித்து வரும் வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று தமது பெயர் பட்டியலில் தவறின்றி சரியாக இடம் பெற்றுள்ளதா என்பதை சரி பார்த்து உறுதி செய்து கொள்ள வேண்டும்.
மேலும் புதிய வாக்காளர் பட்டியலில் இடம்பெற படிவம் 6ஐ அந்தந்த வாக்குச்சாவடி அலுவலரிடம் பெற்று பூர்த்தி செய்து சான்றுகளுடன் தொடர்புடைய வாக்குச்சாவடி அலுவலரிடமே வரும் 30ம் தேதி வரை அளிக்கலாம். பெயர் நீக்கம் செய்ய படிவம் 7ஐ பூர்த்தி செய்து அளிக்க வேண்டும். பெயர் மற்றும் முகவரியில் மாற்றம் ஏதும் செய்ய வேண்டுமானால் படிவம் 8ஐ பெற்று பூர்த்தி செய்து அளிக்கலாம். அதே தொகுதியில் முகவரி மாற்றம் செய்ய படிவம் 8ஏயை பூர்த்தி செய்து அளிக்கலாம்.
படிவங்களை வழங்குவதற்கும், பெற்று கொள்வதற்கும் கூடுதலாக 1113 வரையறுக்கப்பட்ட அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.2 நாட்கள் சிறப்பு முகாம்
வரும் 11ம் தேதி, 25ம் தேதிகளில் சிறப்பு வாக்காளர் சேர்க்கை முகாம் நடைபெறும். அம்முகாம்களில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் முகவர்கள், வாக்குச்சாவடி அலுவலர்கள் தொடர்புடைய வாக்காளர்களிடமிருந்த கேட்புரிமம் மற்றும் ஆட்சேபணைகளை உரிய படிவங்களில் பெற்று கொள்ளலாம். இவ்வாய்ப்பை வாக்காளர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். மேலும் தங்கள் பெயரை சேர்க்க நீக்க உரிய மாற்றம் செய்ய வாக்காளர்கள் நேரடியாக உரிய படிவம் மூலம் விண்ணப்பிக்க இயலாவிட்டால் www.elections.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் விண்ணப்பம் செய்யலாம்.