பேராவூரணி நகர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இன்று மின்வினியோகம் நிறுத்தம். பேராவூரணி துணை மின்நிலைய பராமரிப்பு பணி காரணமாக நடவடிக்கை.
பேராவூரணி கி.வோ துணை மின்நிலையத்தில் இன்றைய தினம் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பேராவூரணி நகர்புற பகுதிகள் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் இன்று மின்வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
தமிழக அரசின் வழிகாட்டுதல்படி மின்நிலையங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் மாதாந்திர சுழற்சியில் பராமரிப்பு மேற்கொள்ளப்பட வேண்டும். இதன்படி பேராவூரணியை அடுத்த செங்கமங்கலத்தில் உள்ள பேராவூரணி கி.வோ துணை மின்நிலையத்தில் இன்று பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இந்த பணிகள் காலை 9.30 மணி தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இதன்பின்னர் பேராவூரணி நகர் உட்பட அனைத்து பகுதிகளுக்கும் 6 மணிக்கு மீண்டும் மின்வினியோகம் தொடங்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.