தஞ்சை மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக வரும் 19ம் தேதி தேர்தல் நடக்கும் இடங்கள் விபரங்கள் வருமாறு:தஞ்சை மாவட்டத்தில் பட்டுக்கோட்டை நகராட்சியில் 33 வார்டுகளில் 27,749 ஆண், 29,214 பெண், 3ம் பாலினம் 18 வாக்காளர் என்று 56,981 பேர் வாக்களிக்கவுள்ளனர். அதிராம்பட்டினம், அம்மாபேட்டை, மதுக்கூர், மெலட்டூர், ஒரத்தநாடு, பேராவூரணி, பெருமகளூர் ஆகிய 7 பேரூராட்சிகளிலும் வாக்குப்பதிவு நடக்கிறது. அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 333 வார்டுகளில் உள்ள 182 வாக்குச்சாவடிகளில் 37,663 ஆண், 37,907 பெண், 3ம் பாலினம் 2 வாக்காளர் என 75,572 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். மதுக்கூர் ஊராட்சி ஒன்றியத்தில் 231 வார்டுகளில் உள்ள 128 வாக்குச்சாவடிகளில் 26,137 ஆண், 28,230 பெண், 3ம் பாலினம் 1 வாக்காளர் என்று 54,358 பேர் வாக்களிக்கவுள்ளனர்.
ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றியத்தில் 447 வார்டுகளில் உள்ள 259 வாக்குச்சாவடிகளில் 65,611 ஆண், 68,174 பெண் என்று 1,33,785 பேர் வாக்களிக்கவுள்ளனர். பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 336 வார்டுகளில் உள்ள 186 வாக்குச்சாவடிகளில் 41,625 ஆண், 46,101 பெண், 3ம் பாலினம் 4 வாக்காளர் என்று 87,730 பேர் வாக்களிக்கவுள்ளனர்.
பேராவூரணி ஊராட்சி ஒன்றியத்தில் 219 வார்டுகளில் உள்ள 150 வாக்குச்சாவடிகளில் 34,243 ஆண், 35,142 பெண் என்று 69,385 பேர் வாக்களிக்கவுள்ளனர்.
சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியம் 282 வார்டுகளில் உள்ள 152 வாக்குச்சாவடிகளில் 35,683 ஆண், 36,424 பெண் வாக்காளர், 3ம் பாலினம் 1 என்று 72,108 பேர் வாக்களிக்கவுள்ளனர். திருவோணம் ஊராட்சி ஒன்றியத்தில் 237 வார்டுகளில் உள்ள 135 வாக்குச்சாவடிகளில் 34,31 ஆண், 34,115 பெண் என்று 68 146 பேர் வாக்களிக்கவுள்ளனர். ஆக மொத்தம் 2,085 வார்டுகளில் 1,192 வாக்குச்சாவடிகளில் 2 லட்சத்து 74 ஆயிரத்து 993 ஆண், 2 லட்சத்து 86 ஆயிரத்து 93 பெண், 3ம் பாலினம் 8 என 5 லட்சத்து 61 ஆயிரத்து 94 பேர் வாக்களிக்க உள்ளனர். 337 இடங்களில் வாக்குப்பதிவு
தஞ்சை மாவட்டத்தில் இரண்டு கட்டமாக நடக்கும் தேர்தலில் 4,569 வார்டுகளுக்கு 2,679 வாக்குச்வாடிகளில் 6 லட்சத்து 43 ஆயிரத்து 89 ஆண், 6 லட்சத்து 60 ஆயிரத்து 96 பெண், 3ம் பாலினம் 32 என்று 13 லட்சத்து 3 ஆயிரத்து 217 பேர் வாக்களிக்கவுள்ளனர். 1 மாநகராட்சி 2 நகராட்சி என்று 129 வார்டுகளுக்கு 337 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது. 22 பேரூராட்சிகளில் 336 வார்டுகளுக்கு 368 வாக்குச்சாவடிகளில் 1 லட்சத்து 15 ஆயிரத்து 873 ஆண் , 1 லட்சத்து 19 ஆயிரத்து 912 பெண், 3ம் பாலினம் 1 வாக்காளரும் என்று 2லட்சத்து 35 ஆயிரத்து 786 பேர் வாக்களிக்க உள்ளனர்.