பேராவூரணி அருகே உள்ள ஊமத்தநாடு சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை.
பேராவூரணியில் இருந்து ஊமத்தநாடு செல்லும் வழியாக இ.சி.ஆர் செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பேராவூரணியில் இருந்து பூக்கொல்லை ஊமத்தநாடு வழியாக சம்பைப்பட்டினத்தில் இ.சி.ஆர் ரோட்டில் சென்று சேரும் ரோடு எவ்வித பராமரிப்பும் இன்றி மிகவும் குண்டு குழியாக மண் ரோடு காட்சி அளிக்கிறது. இந்த ரோட்டில் பேருந்துகள் பின்னால் எவரும் இரண்டு சக்கர வாகனத்தில் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கலைஞர் நகர், ஊமத்தநாடு, குப்பத்தேவன்வலசை பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
இவ்வழியாக தனியார் பள்ளி பஸ்கள், நகர பேருந்துகள் சென்று வருவதால் பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி வருவதாகவும் கூறப்படுகிறது. மாவட்ட நிர்வாகம் உடன் தலையீட்டு தார் சாலை மற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.