நான் பொறந்த மண்ணு இது....
நஞ்சையும் ,புஞ்சையும்
நெஞ்சை நிமிர்ந்தி
சொல்லும் தஞ்சை
ஜில்லாவுல எங்க ஊரு...
பச்சபுள்ள பசி மறந்து
பார்த்து ரசிக்கும்
எங்க ஊரு...
பஞ்சம் இங்கு
வந்த்தில்ல
பட்டிணி யாரும் கிடந்ததில்ல..
பசியோட யாரும் வந்து
திரும்பி போன காலம் இல்ல..!!
ஜாதிக்கு வேல இல்ல
சண்ட கூட வந்ததில்ல ...!!
ஊரு சொந்த காரண்
பிள்ளையாரு இருக்குரானே..!
காவலுக்கு கோவமாக
கருப்பசாமி காக்குரானே....!
ஒன்றுமையும் எங்களுக்கு
ஒருநாளும் குறைஞ்சதில்ல
சித்திர நாயகனா
ஈசன் மகன் வருவானே ..!!
குறையில்லாம குறத்தி
மகன் பால்காவடி எடுப்பானே...!!
சாதி,மதம் எதும் இல்ல
சங்கட்டங்கள் வந்த தில்ல..!!
எங்க ஊரு
தேர போல ஜில்லாவுல
வேறெங்கும் நான் பாத்ததில்ல..
பொருப்பான பசங்க நாங்க
பொருப்பின்றி நடந்த்தில்ல...!!
ஊரெல்லாம் தெண்ணம் தோப்பு
உறவு சொல்லும் மா தோப்பு
வாழ வைக்கும் வாழ தோப்பு
கத்தி பேசும் கருப்பு கொல்ல
சொக்க வைக்கும் சோள கொல்ல
வெக்கபடும் வெண்டி கொல்ல
காடு கனக்கா கத்திரி செடி
கட்டு கட்டா கீர கட்டு
பிழை இல்லா பிழாபழம்
தேனுரும் எலந்த மரம்
தேனி கூடு நவ்வா மரம்
பேய்யாடும் புளிய மரம்
வெரட்டி அடிக்க வேப்ப மரம்
கனி வவ்வா தொங்கும்
பண மரம்
முறையை வளர்க்கும்
முருங்க மரம்
முறச்சி பார்க்கும்
ஈச்ச மரம்
கோடைக்கு கொடுக்காபுலி
கொடி,கொடியா கொவ்வா செடி
வேளிக்கு கள்ளி செடி
வெரகுக்கு முள்ளு செடி.
வீரம் மான மண்ணு
இது நான் பொறந்த மண்ணு
மண்ணு மட்டும்
ஈரம் இல்லங்க
எங்க ஊரு மக்கள்
மனசும் ஈரம்தான்
பேறெடுத்த ஊரணிங்க
எங்க பேராவூரணி....