உலக நாடுகளிடையே சுற்றுலா கொள்கையை வகுக்கின்ற வகையில் ஆண்டுதோறும் செப்டம்பர் 27 ஆம் நாள் உலக சுற்றுலா தின விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.செவ்வாயன்று தஞ்சாவூருக்கு வருகை தந்த அயல்நாட்டு சுற்றுலாப் பயணிகளை சுற்றுலா சிறப்பிடங்களான தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் திருக்கோயில், அரண்மனை வளாகம் ஆகிய இடங்களில் மலர் மாலை அணிவித்து பாரம்பரிய முறையில் வரவேற்கப்பட்டனர்.கல்லூரி மாணவ, மாணவியர்களைக்கொண்டு பெரிய கோவிலை சுற்றியுள்ள. நடைவலப்பாதையினை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது.
கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான சுற்றுலா கருத்தரங்கமும், பள்ளி மாணவ, மாணவியர்களுக்கிடையே சுற்றுலா தொடர்பான ஓவியப்போட்டியும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மாவட்ட ஆட்சியரக அருங்காட்சியகத்தில் நடைபெற்றது. மாலை 6.30 மணிக்கு மாவட்ட ஆட்சியரக அருங்காட்சியக வளாகத்தில் உலக சுற்றுலா தின நிறைவுவிழாவையொட்டி கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. உலக சுற்றுலா தினவிழாவினையொட்டி நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.