பேராவூரணி லயன்ஸ் சங்கம் சார்பில் பல்வேறு அமைப்புகளின் சார்பில் விருதுபெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
லயன்ஸ் சங்க தலைவர் கனகராஜ் தலைமை வகித்தார். லயன்ஸ் சங்க முன்னாள் தலைவர்கள் ஏகாம்பரம், வைரவன் முன்னிலை வகித்தனர். செயலாளர் இளங்கோ வரவேற்றார். விழாவில் ரோட்டரி சங்க பில்டர்நேசன் 2016 விருது பெற்ற குருவிக்கரம்பை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மனோகரன், மக்கள் சட்ட உரிமைகள் கழகம் சார்பில் சிறந்த நல்லாசிரியர் விருது பெற்ற ராமநாதன், அறிவுச்சுடர் விருது பெற்ற நாட்டாணிக்கோட்டை வடக்கு பள்ளி தலைமையாசிரியர் லதாஸ்வரி, சிறந்த கல்வி நிறுவன விருதுபெற்ற ராஜராஜன் பள்ளி தாளாளர் ஜெய்சங்கர் ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
லயன்ஸ் சங்க நிர்வாகிகள் ராமமூர்த்தி, தமிழ்ச்செல்வன், சந்திரமோகன், சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் பேசினர். பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.