இதையறிந்த பத்திரிகையாளர்கள், பொது மேலாளர் இளங்கோவனை சந்தித்து. அப்பகுதியில் நிலவும் போக்குவரத்து பிரச்னைகள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதற்கு பதில் அளித்த, பொது மேலாளர், அங்குள்ள யதார்த்தமான நிலையை விளக்கியுள்ளார்.
அப்போது அவர் கூறியதாவது:
பேராவூரணியில், ஓடும் அரசு பஸ்கள் போதிய பயணிகள் இல்லாததால், நஷ்டத்தில் இயங்குகின்றன. இதனால், பணிமனையை இழுத்து மூடுவதை தவிர வேறு வழியில்லை.
மக்களின், லைப் ஸ்டைல் மாறிவிட்டது. சில ஆண்டுகளுக்கு முன் இருந்து போல, யாரும் மஞ்சள் பையை கையில் தூக்கிகிட்டு, பஸ்சுக்காக காத்திருப்பதில்லை. மேலும், குப்பை படிந்த அரசுப் பஸ்சை விரும்புவதில்லை. டூவீலர், கார், ஆட்டோக்கள். என பயணிக்கின்றனர். பணியாளர்கள் யாரும் ஒழுங்கா வேலைக்கு வருவதில்லை. பேராவூரணி டெப்பபோ என்றால். பனிஷ்மெண்ட் ஏரியாவாக பார்க்கின்றனர்.
இங்கே யாரும் வேலைக்கு வர விரும்புவதில்லை. பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக், பஸ்களை இயக்க முடியவில்லை லாபம் இல்லாமல் பஸ்களை இயக்க முடியாது.
கும்ப்கோணம் கோட்டம் பல கோடி ரூபாய் பெருத்த நஷ்டத்தில் இயங்குகிறது. போக்குவரத்து கழகம் ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு கொடுக்கவே பணம் இல்லை.
சட்டசபையில் அறிவித்தபடி யெல்லாம். நாங்கள் புதிய வழித்தடத்தில் பஸ் இயக்க முடியாது. அரசு அறிவிப்பது அவர்கள் இஷ்டம். அந்த வழித்தடத்தில் பஸ்சில் செல்வதற்கு பயணிகள் இருக்கிறார்களா? நானே நஷ்டத்தில் இயங்கும் கிளையை ஆய்வு செய்ய வந்துள்ளேன்.
நீங்கள் கிளம்புகிறீர்களா.
இவ்வாறு அவர் தடாலடியாக் கூறியுள்ளார். இதை கேள்விப்பட்ட, டெப்போ ஊழியர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.