பேராவூரணி பேரூராட்சி 1வது 17 வது மற்றும் 18வது வார்டில் குப்பை, சாக்டைகழிவுகளை அகற்றாததால் சுகாதா சீர்கேட்டில் சிக்கி தவிக் கி றது.
பேராவூரணி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது. இங்கு 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த பகுதிகளில் கடந்த சில நாட்களாக குப்பைகள் அகற்றப்படாமல் உள் ளது. குறிப்பாக 1வது வார்டு தேவதாஸ் ரோட்டில் பல இடங்களில் குப்பைகள் அகற்றப்படாமல் சாலையை ஆக்கிரமித்துள்து. கடந்த 2 நாட்களாக மழை பெய்ததால் குப்பைகள் அழுகிதுர்நாற்றம் வீசுகிறது.
குடியிருப்பு பகுதிகளில் சாக்கடை கழிவு நீர் அகற்றப்படாததால் சாலையில் வழிந்தோடுகிறது. ஒரு சில இடங்களில் அகற்றப்படும் கழிவுநீர், நகரின் ஒதுக்குப்புறமாக கொட்டாமல் குமரப்பா பள்ளி முன்பும், தாலுகா அலுவலகம் அருகிலும், ஆதி திராவிடர் நல மாணவியர் விடுதி முன்பாக வாய்க்காலில் கொட்டுவதால் துர்நாற்றம் வீசுவதோடு நோய்பரவும் அபாயம் உள்ளது.
17 வது வார்டு ஆனந்தவள்ளி வாய்க்கால் பகுதி ஆனந்தவள்ளி வாய்க்கால் குப்பைகள் கொட்டப்படுவதாலும், 18 வது வார்டு மணிக்கட்டி ரோடு பகுதி பல இடங்களில் குப்பைகள் அகற்றப்படாமல் சாலையை ஆக்கிரமித்துள்ளது.
சுகாதாரத்தை காக்க வேண்டிய பேரூராட்சி நிர்வாகம் மெத்தனமாக இருப்பது பொது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பல மாதங்களாக பேரூராட்சியில் நிர்வாக அதிகாரி பொறுப்பில் இல்லாததால் சுகாதார பணியாளர்களை முடுக்கி வேலை வாங்கும் அதிகாரிகளும் இல்லாததால் பேராவூரணி நகரம் சுகாதார சீர்கேட்டில் சிக்கி தவிக்கிறது. உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.