காவிரி மேலாண்மை வாரியத்தை 4 வாரத்துக்குள் மத்தியஅரசு அமைக்க வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை விவசாயிகள் வரவேற்றனர். தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாநில தலைவரும், தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தஞ்சை மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான புண்ணியமூர்த்தி தலைமையில் விவசாயிகள் மகேஷ், மணி, சுதாகர் மற்றும் சிலர் நேற்றுமாலை தஞ்சை பழைய பஸ் நிலையம் முன்பு பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பின்னர் புண்ணியமூர்த்தி கூறும்போது, தமிழக விவசாயிகளின் உணர்வுக்கு மதிப்பு அளித்து காவிரி மேலாண்மை வாரியத்தை 4 வாரத்திற்குள் அமைக்க வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு விவசாயிகள் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்போம் என பிரதமர் மோடி உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றார்.
தஞ்சாவூர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவு பட்டாசு வெடித்து விவசாயிகள் மகிழ்ச்சி.
செப்டம்பர் 21, 2016
0
காவிரி மேலாண்மை வாரியத்தை 4 வாரத்துக்குள் மத்தியஅரசு அமைக்க வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை விவசாயிகள் வரவேற்றனர். தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாநில தலைவரும், தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தஞ்சை மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான புண்ணியமூர்த்தி தலைமையில் விவசாயிகள் மகேஷ், மணி, சுதாகர் மற்றும் சிலர் நேற்றுமாலை தஞ்சை பழைய பஸ் நிலையம் முன்பு பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பின்னர் புண்ணியமூர்த்தி கூறும்போது, தமிழக விவசாயிகளின் உணர்வுக்கு மதிப்பு அளித்து காவிரி மேலாண்மை வாரியத்தை 4 வாரத்திற்குள் அமைக்க வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு விவசாயிகள் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்போம் என பிரதமர் மோடி உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றார்.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க