பேராவூரணியில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும், கர்நாடக தமிழர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய கன்னட வெறியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பேராவூரணி-சேதுபாவாசத்திரம் ஒன்றிய திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் பேராவூரணி அண்ணாசிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திராவிடர் விடுதலைக்கழக மாவட்ட அமைப்பாளர் சித.திருவேங்கடம் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்தார். தி.வி.கழக பரப்புரை செயலாளர் பால்.பிரபாகரன், தமிழக மக்கள் புரட்சி கழக கொள்கை பரப்பு செயலாளர் ஆறு.நீலகண்டன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில் ஆயர் த.ஜேம்ஸ், தி.வி.க காளிதாஸ், சிபிஐ ராஜமாணிக்கம், சித்திரவேல், சிபிஎம் ஆர்.எஸ்.வேலுச்சாமி,மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு தா.கலைச்செல்வன், த.ம.பு.க மூர்த்தி, சம்பத், ஆயில் மதி, மெய்ச்சுடர் நா.வெங்கடேசன், கு.பாரி, திருக்குறள் பேரவை கொன்றை சண்முகம், மதிமுக பாலசுப்பிரமணியன், குமார், கண்ணன், தேமுதிக சீனிவாசன், பழனிவேல், த.ம.மு.க ஆசீர்வாதம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.