திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே போட்டியில், பேராவூரணி தாய் புடோகான் கராத்தே பயிற்சி பள்ளி மாணவர்கள் பதக்கங்களை வென்று சாதனை புரிந்துள்ளனர்.கராத்தே பள்ளி மாணவர்கள் எஸ்.எம்.ஹரிஷ் இரண்டு தங்கப் பதக்கங்களையும், எஸ்.எம்.ஹரிஷா, ஸ்பர்சன் ராஜ், எஸ்.வி.சிவபாலன் ஆகியோர் தலா 1 வெள்ளிப் பதக்கங்களையும், என்.நவீன்குமார், பி.மணிமேகலை, கே. விக்னேஷ் ஆகியோர் தலா 1 வெண்கலப் பதக்கங்களையும் வென்று சாதனை படைத்தனர்.
தாய் புடோகான் கராத்தே பயிற்சி பள்ளி நிறுவனர் மாஸ்டர் கே.பாண்டியன் பஞ்சாபின் வீரக் கலையான ‘‘கட்கா” தற்காப்பு கலை 2 மாதகால சிறப்பு பயிற்சியினை முடித்து சான்றிதழ் பெற்றார்.திருச்சி ஓ.ஏ. எஃப்.டி மகாலில் தமிழக அளவில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 450 க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவர்களை கராத்தே தலைமை பயிற்சியாளர்கள் சென்சாய் சரவணன், ரென்சி குப்பன் ஆகியோர் பாராட்டி பதக்கங்களை அணிவித்தனர்.