இன்றும் செய்தித்தாள் படிக்க டீ-கடைக்குச் செல்லும் வழக்கம் தொடர்ந்து வருகிறது.
டீ கடை வளர்ச்சியில் செய்தித்தாள்களின் பங்கு அதிகம். செய்திகள்களின் இடத்தை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பறித்துக்கொண்டுள்ள இக்காலத்தில் இணையம் படு வேகமாக வளர்ந்து வருகிறது. இச்சூழலை சாதகமாக்கிக் கொண்டு இணைய திறன் பேசி பயனாளிகளைக் கவர இலவச Wi-Fi சேவையை வழங்கி வியாபாரத்தை வளர்த்து வருகிறது பேராவூரணி ரஜினிமுருகன் டீ கடை.