பேராவூரணியில் தமிழ்நாடு ஓய்வுபெற்ற அலுவலர் சங்க 33வது ஆண்டு நிறைவு விழா மாநாடு நேற்று நடந்தது. வட்டார தலைவர் தங்கராசு தலைமை வகித்தார்.
செயற்குழு உறுப்பினர் ஈஸ்வரன் வரவேற்றார். செயலாளர் யூசுப் ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் கோவிந்தன் நிதிநிலை அறிக்கை வாசித்தார். துணை செயலாளர் சாமியப்பன் தீர்மானங்களை முன்மொழிந்தார். மாநில துணைத்தலைவர் லட்சுமிகாந்தன் சிறப்புரையாற்றினார். மாநாட்டில் ஓய்வுபெற்றவர்களுக்கு பணப்பயன் வழங்கிய அரசாணையின் முழுப்பயனையும் ஓய்வூதியர்கள் பெற ஆவண செய்ய வேண்டும். பழைய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவதோடு உதவித்தொகையாக ரூ.2 லட்சம் உயர்த்தி வழங்க வேண்டும்.
அனைத்து மாவட்டங்களிலும் ஓய்வூதியர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பாரத் கல்வி குழும தலைவர் புனிதா கணேசன், ஓய்வூதியர் சங்க முன்னாள் தலைவர் கிருஷ்ணன், லட்சுமி விலாஸ் வங்கி கிளை மேலாளர் கார்த்திக் செல்வம், புலவர் போசு கலந்து கொண்டனர். நாடிமுத்து நன்றி கூறினார்.