தமிழகம் முழுவதும் அக்டோபர் 17 மற்றும் 19ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. உரிய கால அவகாசம் இல்லாததால், இந்த தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என திமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும், தேர்தல் நடத்துவதற்கான தேதி டிசம்பர் 30ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என, தேர்தல் ஆணையத்துக்கு அறிவுறுத்தியது. தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து, தேர்தல் ஆணையம் மீண்டும் மனு செய்தது.
இந்த வழக்கின் விவாதம் தற்போது, உயர்நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது. தேர்தல் ஆணையம் தரப்பில் குற்றப் பின்னணி குறித்து மனு தராதவர்களின் வேட்பு மனுக்கள் நிராகரிக்க முடியாது. இடஒதுக்கீடு கோரிக்கைக்காக வந்த வழக்கில் தேர்தலை ரத்து செய்தது செல்லாது என வாதிட்டது.
வாதத்தை கேட்ட நீதிமன்றம், தேர்தல் ரத்துக்கான உத்தரவை திரும்ப பெற முடியாது. மேலும் 4 வாரங்கள் நீடிக்கும் என கூறியது. மேலும், உள்ளாட்சி தேர்தல் குறித்து பதிலளிக்க வேண்டும் என திமுக மற்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.