நாளை முதல் வங்கிகளுக்கு 5 நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனவே வாடிக்கையாளர்கள் வங்கி சம்பந்தமான பணிகளை இன்றே மேற்கொள்ள வேண்டும் என வங்கி நிர்வாகங்கள் அறிவித்துள்ளன. தமிழகத்தில் 500 தனியார் வங்கிக் கிளைகள் உள்பட 8,000 வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. இவைகளுக்கு நாளை முதல் 5 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, நாளை 2வது சனிக்கிழமை, மறுநாள் ஞாயிற்றுக்கிழமை, 10ம் தேதி ஆயுதபூஜை, 11ம் தேதி விஜயதசமி, 12ம் தேதி மொகரம் என 5 நாட்கள் தொடர் விடுமுறை தினமாகும்.
அன்றைய தினங்களில் வங்கிகள் இயங்காது. பண பரிவர்த்தனை, காசோலை பரிமாற்றம் உள்ளிட்ட நடவடிக்கைகளும் இருக்காது. ஏடிஎம் மையங்களிலும் பணம் நிரப்பப்படுவதை பொறுத்துதான் அதன் செயல்பாடும் அமையும். எனவே, வங்கி வாடிக்கையாளர்கள் வங்கி சம்பந்தமான பணிகளை இன்றே மேற்கொள்வது நலம் என அனைத்து வங்கி நிர்வாகங்களும் அறிவித்துள்ளன.