பேராவூரணி அருகே ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை உயிர்பலி ஏற்படும் முன் மாற்ற வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பேராவூரணி அருகே உள்ள செங்கமங்கலம் துணை மின் நிலையம் அருகிலும் அதன் அருகில் உள்ள கயறு தொழிற் சாலை அருகிலும் மின்கம்பங்கள் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து எலும்பு கூடு போல் காட்சியளிக்கிறது. மேலும் சில இடங்களில் வில் போல் வளைந்த நிலையிலும் உள்ளது. பேராவூரணி, திருச்சி முக்கிய நெடுஞ் சாலையான இவ்வழியே ஏராளமான பேருந்து போக்குவரத்துகளும் அருகில் உள்ள தனியார் பள்ளிக்கு ஆயிரக்கணக்கான மாணவர்களும் சென்று வரும் நிலையில் மின்கம் பம்சாய்ந்து விழுந்தால் பெரும் உயிரிழப்பு ஏற்படும் நிலையில் உள்ளது.
இதனை மாற்ற மின்வாரியத் துறைக்கு மனு அளித்தும் பலனில்லை எனவே உடனே புதிய மின் கம்பங்கள் நடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நன்றி : தினகரன்