சர்வதேச பெண் குழந்தைகள் தினம் இன்று (அக்டோபர் 11ஆம் தேதி) கொண்டாடப்படுகிறது. பெண் குழந்தைகளின் உரிமைகளை நிலைநாட்டவும், அவர்களது திறமைகளையும், படைப்புகளையும் அங்கீகரிக்கும் விதமாகவும் சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கொண்டாட ஐ.நா. சபை 2012ஆம் ஆண்டு முடிவு செய்தது.
அதன்படி ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 11ஆம் நாள் சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இது, தங்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளுக்கு எதிர்த்து போராடுவதற்குப் பெண்களுக்கு அதிகாரமளித்தல் போன்றவை தேவை என்பதை உணர்த்துகிறது.
சமுதாயத்தில் பெண் குழந்தைகளின் பிறப்புரிமையை நிலைநாட்டவும், பாலியல் வன்முறையில் இருந்து பெண் குழந்தைகளை காக்கவும் சட்டங்கள் இயற்றபட்டு கடைபிடிக்கப்படுகிறது, ஆனால், இன்னும் பெண் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்முறைகள் குறைந்தபாடில்லை.
மேலும், ஆரம்ப கல்வியறிவு இல்லாத குழந்தைகள் இன்னும் நாட்டில் இருக்கதான் செய்கிறார்கள். அவர்களின் எதிர்கால வாழ்க்கையை முன்னேற்றும் நோக்கத்துடன் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். சமூகத்தில் பெண்கள் அவமதிக்கப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும். மதிக்கபட வேண்டும் என்பதை உறுதிமொழியாக ஒவ்வொருவரும் ஏற்றால் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாகுபாடும் வன்முறையும் இல்லாது ஒழிந்து போகும்.