பேராவூரணி ஊராட்சி ஒன்றியம் இடையாத்தி கிழக்கு தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் வீர.சந்திரசேகரனுக்கு, புதுக்கோட்டை அம்பிகா கல்வி அறக்கட்டளை சார்பில் 2016 ஆம் ஆண்டிற்கான "நாடு விரும்பும் லட்சிய ஆசிரியர்" விருது புதுக்கோட்டை நகர்மன்ற விழா அரங்கில் அண்மையில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செ.சாந்தி விருது மற்றும் பாராட்டு சான்றிதழை வழங்கி பாராட்டி பேசினார்.
விழாவில் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் எம்.தமிழ்செல்வன், அறக்கட்டளை நிர்வாகி டாக்டர் சந்திரா ரவீந்திரன், கல்வியாளர் சிவாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விருதுபெற்ற ஆசிரியர் வீர.சந்திரசேகரனை, தலைமையாசிரியர்கள் நெடுவாசல் கருப்பையன், நாகை முத்தமிழ்செல்வன், நா.பன்னீர்செல்வம், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் ஆர்.சந்திரசேகரன், ஆசிரியர் செ.ராமநாதன் மற்றும் சக ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள், பெற்றோர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.