பட்டுக்கோட்டை நாடியம்மன் கோவில் சிறப்பு வழிபாடு.

Unknown
0

பட்டுக்கோட்டை நாடியம்மன் கோவில் முதல் அமைச்சர் ஜெயலலிதா பூரண நலம் பெற வேண்டி சி.வி.சேகர் எம்.எல்.ஏ. தலைமையில் அ.தி.மு.க.வினர் ஆயுஷ்ய ஹோமம் நடத்தி,சிறப்பு வழிபாடு நடத்தினர். நேற்று காலை 8 மணி முதல் 10 மணி வரை ஆயுஷ்யஹோமம் நடை பெற்றது. அதன்பிறகு ஜெயலலிதா  பெயரில் நாடியம்மன் சாமிக்கு சிறப்பு அலங்கார ஆராதனை நடந்தது. நிகழ்ச்சியில் பேராவூரணி எம்.எல்.ஏ. கோவிந்தராஜன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் அமுதாராணி ரவிச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. ராமச்சந்திரன், முன்னாள் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், நகரசபை தலைவர் ஜகவர் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் சுபராஜேந்திரன், துணைச்செயலாளர் பிரகாசம் ஆகியோர் வரவேற்றனர். ஒன்றிய செயலாளர்கள். துரைமாணிக்கம், சுந்தரராஜன், சத்தியமூர்த்தி ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top