திருச்சிற்றம்பலம் அரசினர் மேல் நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் சார்பாக திருச்சிற்றம்பலத்தில் ஒரு வாரம் நடைபெற்ற சிறப்பு முகாமின் நிறைவு விழா புதனன்று பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு உதவி தலைமை ஆசிரியர் (பொறுப்பு )செல்லத்துரை தலைமை வகித்தார். திருச்சிற்றம்பலம் ஊராட்சி மன்றத்தலைவர் மணிமேகலை பிரபநாதன், முன்னாள் சார்பதிவாளர் புஷ்பவனம் ஆகியோர் முகாமில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினர். முன்னதாக ரெஜினா கண்மணி, பெல்சி ராணி ஆகியோர் வரவேற்றனர். திட்ட அலுவலர் ராமநாதன் நன்றி கூறினார்.
புனல்வாசல் புனித ஆரோக்கிய அன்னை மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சார்பாக நடைபெற்ற நாட்டு நலப்பணித்திட்டத்தின் சிறப்பு முகாமின் நிறைவு விழா அந்தோணியார் கோயில் வளாகத்தில் நடைபெற்றது. பள்ளியின் தாளாளர் வின்சென்ட் தலைமை வகித்தார். திட்ட அலுவலர் ரெங்கசாமி அறிக்கை வாசித்தார். புனல்வாசல் ஊராட்சி மன்றத் தலைவர் செந்தில்குமார், மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார். முன்னதாக பள்ளியின் தலைமை ஆசிரியர் தாசன்லியோன் வரவேற்றார். ஜேசுராஜ் நன்றி கூறினார்.