பேராவூரணி ஊராட்சி ஒன்றியம் அலுவலகத்தில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்தார்கள்.

Unknown
0







பேராவூரணி  ஊராட்சி ஒன்றியம் அலுவலகத்தில் அணைத்து  கட்சிகளும்
வேட்பாளர்  தங்களின் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்கள்.

பேராவூரணி சுற்று  வட்டாரப்  பகுதிகளில்  உள்ள  ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும்  வார்டுகள்  போட்டியிடும் வேட்பாளர்  தங்களின்  வேட்பு மனுவை தாக்கல் செய்தார்கள்.




தமிழக உள்ளாட்சி தேர்தலில் பேராவூரணி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராக போட்டியிட விரும்புவோர் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு இன்றே கடைசி நாள் ஆகும். வரும் 6-ம் தேதி வேட்பாளர்கள் இறுதிப்பட்டியல் வெளியிடப்படுகிறது. பேராவூரணி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு விரைவில் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 26-ம் தேதி தொடங்கியது. இதனைத் தொடர்து திமுக மற்றும் அஇஅதிமுக உள்ளிட்ட கட்சிகள் பேராவூரணி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராக போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் பட்டியலை அண்மையில் வெளியிட்டன. வேட்புமனு தாக்கல் செய்வதற்கு இன்றே கடைசி நாள் ஆகும். நாளை வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது. 6-ம் தேதி மனுக்களை திரும்ப பெற கடைசி நாள். அன்றைய தினம் மாலையில் இறுதிப்பட்டியல் வெளியிடப்படுகிறது. பேராவூரணி ஊராட்சிய ஒன்றியத்தில் வேட்புமனு தாக்கலுக்கு இன்று கடைசி நாள் என்பதால் அனைத்து கட்சி வேட்பாளர்களும் சுயேட்சைகளும் மனு தாக்கல் செய்தனர். பேராவூரணி ஊராட்சிய ஒன்றிய வார்டுகளில் வேட்பாளர்களாக போட்டியிடும் திமுக மற்றும் அஇஅதிமுக வேட்பாளர்களும் ஏற்கனவே மனுதாக்கல் செய்து பிரசாரத்தை தொடங்கி விட்டனர். பேராவூரணி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராக போட்டியிடும் பல்வேறு கட்சியினர் பேராவூரணி ஆவணத்தில் உள்ள பேராவூரணி ஊராட்சிய ஒன்றிய அலுவலகத்தில், தேர்தல் அலுவலரிடம் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.



Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top