பேராவூரணி அருகே விவசாய மையம் அமைய இருக்கும் இடத்தை வியாழக்கிழமை ஆய்வு செய்த தஞ்சை மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் அரசின் திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படுமென உறுதியளித்தார்.
பேராவூரணி பேரூராட்சியை சேர்ந்த நாட்டாணிக்கோட்டையில் விவசாய மையம் அமைப்பதற்காக புறம்போக்கு நிலத்தை கையகப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலத்தில் சிலருக்கு பட்டா வழங்கப்பட்டதால், அதில் சிலர் வீடு கட்டி வசித்து வருகின்றனர்.
இதனால் விவசாய மையத்துக்கு வேறு இடத்தை தேர்வு செய்ய வேண்டும். இந்த இடத்தை காலி செய்யமாட்டோமென குடியிருப்போர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து ஆய்வு செய்ய வருகை தந்த தஞ்சை ஆட்சியர் ஆ. அண்ணாதுரை கூறியது:
அரசின் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். அதேநேரத்தில் மக்களுக்கு இடையூறு இல்லாமல் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். பேச்சுவார்த்தை மூலம்தான் பிரச்னைகளுக்கு தீர்வு காணமுடியும். கோட்டாட்சியர் தலைமையில் உடனடியாக அமைதி பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்படும்.
பேச்சுவார்த்தையின்போது உங்களது கோரிக்கைகளை தெரிவியுங்கள். அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். இங்கு குடியிருப்போருக்கு வீடு கட்டுவதற்கு மாற்று இடமும், பசுமை வீடு திட்டத்தில் வீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
ஆட்சியரிடம் பேரூராட்சி முன்னாள் தலைவர் என்.அசோக்குமார் மற்றும் நாட்டாணிக்கோட்டை கிராம மக்கள் இங்கு குடியிருப்போருக்கு இந்த பகுதியிலேயே இடம் வழங்க வேண்டுமென வலியுறுத்தினர்.