தமிழக சட்டப்பேரவைக்கு தேர்தல் நடந்து 100 நாட்கள் கடந்துள்ள நிலையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் 100 நாள் செயல்பாடு குறித்து தந்தி தொலைக்காட்சியில் கருத்துக்கேட்பு நடத்தப்பட்டு "மக்கள் யார் பக்கம்" என்ற நகிழ்ச்சி மூலமாக கருத்துக்கேட்பு முடிவுகள் தினந்தோறும் வெளியாகி வருகிறது. இந்த வரிசையில் நமது பேராவூரணி எம்.எல்.ஏ. கோவிந்தராசு அவர்களில் 100 நாள் செயல்பாடு குறித்து தந்தி டிவி கருத்துக்கேட்பு முடிவுகள் நேற்று (11-10-2016) வெளியிடப்பட்டன.
100 நாட்களில் பேராவூரணி எம்.எல்.ஏ வின் செயல்பாடு எவ்வாறு உள்ளது என பேராவூரணி மக்களிடம் கேட்கப்பட்டதில், "34% மக்கள் மோசம் எனவும், 31% மக்கள் நன்று எனவும், 20% மக்கள் சராசரி எனவும், 11% மக்கள் தற்போதே கணிக்க முடியவில்லை எனவும், 4% மக்கள் கருத்து இல்லை" எனவும் தெரிவித்துள்ளதாக தந்தி தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.