பேராவூரணி மணக்காடு- ரெட்டவயல் ஊராட்சியில் நூறுநாள் வேலைத்திட்டத்தில் உள்ள பல்வேறு குளறுபடிகளை களையவும், நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்கக் கோரியும், வங்கி முகவரின் மோசடியைக் கண்டித்தும் மேலும் பல் வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், சேதுபாவாசத்திரம் ஒன்றியம் ரெட்டவயல் கடைவீதியில் அக்.13(வியாழக்கிழமை) சாலைமறியல் நடைபெறும் என அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் அறிவிக்கப் பட்டிருந்தது.இந்நிலையில் பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் செவ்வாயன்று நடைபெற்ற சமாதானப் பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்பட்டதையடுத்து நடைபெறுவதாக இருந்தசாலை மறியல் கைவிடப் பட்டது.வட்டாட்சியர் தங்கபிரபாகரன் தலைமையில் நடைபெற்ற சமாதான பேச்சுவார்த்தையில் வட்டார வளர்ச்சிஅலுவலர்கள் கிருஷ்ணமூர்த்தி, ஏ.ராஜேந்திரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன் ( நூறு நாள் வேலைத்திட்டம்), காவல்துறை ஆய்வாளர் ஜனார்த்தனன், துணைவட்டாட்சியர் தெய்வானை,வருவாய் ஆய்வாளர் தமிழரசி மற்றும் ரெட்டவயல்ஊராட்சி தலைவர் திலீப் குமார், தொழிலாளர்கள் சார்பில் விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் கே.பக்கிரிசாமி, மாவட்டத் தலைவர் ஆர்.வாசு, விவசாயிகள் சங்க மாவட்டக் குழு உறுப்பினர் வீ.கருப்பையா, சிபிஎம் சேதுபாவாசத்திரம் ஒன்றியச் செயலாளர் ஆர்.எஸ்.வேலுச்சாமி, நகர்ச் செயலாளர் ரெங்கசாமி, நூறுநாள்வேலைத்திட்ட பணியாளர் கள் ராணி, இந்திராணி, திலகவதி, புவனேசுவரி மற்றும் 13 பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில்,” நூறுநாள்வேலைத்திட்ட தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள சம்பள பாக்கி தீபாவளிக்குள் வழங்கப்படும். முறைகேட்டில் ஈடுபட்ட வங்கி முகவர் உடனடியாக மாற்றப்பட்டு புதிய முகவர் நியமிக்கப்படுவார். வாரத்தில் எப்பொழுது சென்றாலும் மறுக்காமல் வேலை வழங்கப்படும். கூலி ரூபாய் 180 க்கு குறையாமல் வழங் கப்படும்.வங்கி கணக்கு புத்தகம் படிப்படியாக வழங்கப்படும்” என உறுதியளிக்கப்பட்டதையடுத்து சாலை மறியல் விலக்கிக்கொள்வதாக அறிவிக்கப் பட்டது.
நன்றி : தீக்கதிர்
நன்றி : தீக்கதிர்