உயிர்ப்பொருள்கள், உயிரற்ற பொருட்கள் அனைத்திலும் நீக்கமற இறைவன் நிறைந்து இருக்கிறான். வாழ்க்கையில் நம் உயர்வுக்கு உதவும் ஆயுதங்களை போற்றும் விதமாக அவைகளை இறைவனாக பாவித்து, அவற்றிற்கு பூஜை செய்வதே ஆயுதபூஜை. ஒவ்வொருவரும் அவரவர் தொழில் உபகரணங்களை கழுவி சுத்தம் செய்து, எண்ணெய் தடவி, வண்ணங்கள் தீட்டி பூஜை செய்யப்படுகிறது. இவ்வாறு பூஜிக்கப்படும் ஆயுதங்களுக்கு அன்று ஒரு நாள் ஓய்வு கொடுப்பதும், அடுத்த நாள் அவற்றை எடுத்து தொழிலுக்கு பயன்படுத்துவதும் சிறப்பாகும். ஆயுதபூஜைக்கு அடுத்த நாள், அதாவது பத்தாவது நாளான விஜயதசமியன்று புதிதாக தொழில் தொடங்குவதும், முதன் முதலாக குழந்தைகளை கல்வி பயில பள்ளியில் சேர்ப்பது போன்ற முக்கிய நிகழ்வுகள் நடக்கும்.