சுகாதாரத்தை கடைபிடிக்காத நிறுவனங்களின் உரிமம் ரத்து.

Unknown
0



பேராவூரணியில் தமிழ்நாடு அரசு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் சிறப்பு காய்ச்சல் தடுப்பு ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. தாசில்தார் தங்கபிரபாகரன், பேரூராட்சி செயல் அலுவலர் சிவகாமிநாதன் முன்னிலை வகித்தனர். காய்ச்சல் குறித்தும், அது வராமல் தடுப்பதற்கான வழிமுறை குறித்தும் மாவட்ட மலேரியா அலுவலர் போத்திப்பிள்ளை பேசினார்.

வட்டார மருத்துவ அலுவலர் சவுந்தரராஜன் தலைமை வகித்து பேசுகையில், பேராவூரணி பேரூராட்சி பகுதியில் டெங்கு உள்ளிட்ட மர்ம காய்ச்சல்கள் பரவுவதற்கான சூழல் உள்ளது. எனவே கல்வி நிலையங்கள், திருமண மண்டபங்கள், உணவகங்கள், விடுதிகள் ஆகியவை நோய் தடுப்பு நடவடிக்கையாக பொது சுகாதாரத்தை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.
அவ்வாறு கடைபிடிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உரிமம் ரத்து செய்யப்படுவதோடு சிறை தண்டனை மற்றும் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்க பொது சுகாதார சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் குடிநீர், மின்சாரத்தை ரத்து செய்யவும் சட்டத்தில் இடம் உண்டு. எனவே அனைவரும் பொது சுகாதாரத்தை பேனி நோய் பாதிப்பில்லாத மாவட்டத்தின் முன்மாதிரி பேரூராட்சியாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார். டாக்டர்கள் அறிவானந்தம், இலக்கியா, அரவிந்த், சுகாதார மேற்பார்வையாளர்கள் சிங்காரவேலு, பாஸ்கர் மற்றும் உணவக, பள்ளி, விடுதி, திருமண அரங்க உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். 
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top