பேராவூரணியில் பகுதியில் ஆபத்தான காலங்களில் உயரமான கட்டிடங்களில் சிக்கியவர்களை மீட்பது எப்படி என தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி துறையினர் செய்து காட்டினர்.பேராவூரணியை அடுத்த சேதுபாவாசத்திரத்தில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் பேரிடர் கால அபாய மேலாண்மை திட்ட செயல்முறை விளக்கம் திங்களன்று நடத்தப்பட்டது.சேதுபாவாசத்திரம் ஊராட்சி மன்றத்தலைவர் சமயமுத்து நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். பேராவூரணி வட்டாட்சியர் தங்க பிரபாகரன், சேதுபாவாசத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தீயணைப்பு நிலைய அலுவலர் எல்.குழந்தைராஜ் தலைமையில் முன்னணி தீயணைப்பு அலுவலர் எஸ்.தங்கமணி, வீரர்கள் வீ.சீனிவாசன், அ.சுப்பையா, மா.ரஜினி, விமலானந்தன், மணிவேல் உள்ளிட்டோர் பல்வேறு முதலுதவி முறைகள், ஆபத்தில் சிக்கியவர்களை காப்பது பற்றி செயல் விளக்கம் அளித்தனர். இதில் அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நன்றி : தீக்கதிர்