தமிழகத்தில் அக்டோபர் 17 மற்றும் 19-ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுக்கள் கடந்த மாதம் 26-ஆம் தேதி தொடங்கியது. வேட்புமனுக்களை தாக்கல் செய்ய நாளை கடைசி நாளாகும்.
இந்நிலையில், உள்ளாட்சி பதவிகளில் போட்டியிட இதுவரை 2 லட்சத்து 52 ஆயிரத்து 352 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட நேற்று மட்டும் 21,018 பேர் தங்களது வேட்பு மனுவினை தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் இதுவரை 1,047 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
மேலும், ஊராட்சி மன்ற தலைவருக்கு 40,872 பேரும், ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கு ஒரு லட்சத்து 79 ஆயிரத்து 209 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.