பட்டுக்கோட்டை அடுத்துள்ள பள்ளிகொண்டான் லாரல் மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் என்எஸ்எஸ் சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.
4-வது நாளான வெள்ளிக்கிழமை காலை அவ்வூரிலுள்ள பாசன வாய்காலில் மண்டிக் கிடந்த புல் பூண்டுகளையும், குப்பைகளையும் அகற்றி மாணவர்கள் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.
நிகழ்ச்சிக்கு பள்ளித் தாளாளர் வி. பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். முதல்வர் பி. சந்திரசேகரன், துணை முதல்வர் வி.பி. சந்திரசேகர், இயக்குநர் எலிசபெத் தேவாசீர்வாதம் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் டி. ஆறுமுகம் சுற்றுச்சூழல் என்ற தலைப்பில் பேசினார். என்எஸ்எஸ் திட்ட அலுவலர் ஆர். கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.