இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:–
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள பெட்ரோல்–டீசல் விற்பனை நிலையங்களில் ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் இன்று (திங்கட்கிழமை) வரை ஏற்றுக்கொள்ளப்படும். அரசின் முடிவை தொடர்ந்து இந்த அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளியிடப்படுகிறது.
ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் இனி செல்லாது என்ற அறிவிப்பால் வடமாநில லாரி டிரைவர்கள் ஆங்காங்கே லாரிகளை நிறுத்திவைத்துள்ளனர். அவர்களிடம் சில்லரை இல்லாத காரணத்தால் பசிக்கொடுமையால் வாடி வருகின்றனர். அந்தவகையில் சென்னையை அடுத்த சோழவரம் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் தவித்து வந்த வடமாநிலங்களைச் சேர்ந்த லாரி டிரைவர்களுக்கு கடந்த 9–ந் தேதி முதல் இலவசமாக உணவு வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.