தஞ்சாவூர் பெரியகோவிலில் மாமன்னன் ராஜராஜ சோழன் 1031வது சதயவிழா 2 நாட்கள் நடக்கிறது. இதையொட்டி தஞ்சை மாவட்டத்திற்கு 9ந்தேதி உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
உலக புகழ் பெற்று விளங்கும் பெரிய கோயிலை கட்டிய பேரரசர் ராஜராஜ சோழன் பிறந்த நாள் விழா வருடா வருடம் கொண்டாடப்படுகிறது. அவரை சிறப்பிக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், 1031வது ஆண்டு பிறந்தநாள் விழா வருகிற 8, 9ஆகிய தேதிகளில் கொண்டாடப்படுகிறது. எனவே, இதனை முன்னிட்டு முன்னிட்டு வருகிற 9ம் தேதியன்று ஒரு நாள் மட்டும் தஞ்சை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.