பணம் எடுப்பதற்காக பேராவூரணி பகுதியில் உள்ள அனைத்து வங்கிகள் முன்பும் மக்கள் நீண்ட நேரமாக காத்து இருக்கின்றனர்.
நாடு முழுவதிலும் உள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி கடந்த 8-ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டார்.
இதனையடுத்து மக்கள் தங்களிடம் உள்ள பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு ஏதுவாக இந்தவார ஞாயிற்றுக்கிழமையும் அதாவது இன்றும் அனைத்து வங்கிகளும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பேராவூரணி உள்ள அனைத்து வங்கிகளும் இன்று திறக்கப்பட்டுள்ளன. விடுமுறை நாள் என்பதால், அதிகப்படியான மக்கள், நீண்ட வரிசையில் வங்கி முன் காத்திருந்து தங்களது பழைய பணத்தை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தங்களிடம் உள்ள பணத்தை எடுப்பதற்காக நீண்ட வரிசையில் ஏடிஎம்-கள் முன்பும் மக்கள் காத்து இருக்கின்றனர். இருப்பினும் ஒரு சில இடங்களில் உள்ள ஏடிஎம்-களில் போதுமான பணம் இல்லை என்பதால் மக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.