பேராவூரணி ஏடிஎம்கள் பணம் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற மக்கள்.

Unknown
0



பேராவூரணி உள்ள பெரும்பான்மையான ஏடிஎம் மையங்களில்  பணம் இல்லாததால், தங்களது வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை எடுக்க முடியாமல் ஏமாற்றத்துடன் பொது மக்கள் திரும்பிச் சென்றனர். இதேபோல், நோட்டு மாற்ற வருவோருக்கு வைக்க பல வங்கிகளில் மையும் வரவில்லை.
பழைய செல்லாத 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதில் புதிய அறிவிப்புகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டே இருக்கின்றன. ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான அளவு குறைக்கப்பட்டு இனி ரூ.2 ஆயிரம் மட்டுமே மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

 அதேபோல ரூ.500 நோட்டுகளும் வரவில்லை, பழைய ரூ.100 நோட்டுகளும், ரூ.50 நோட்டுகளும், ரூ.20 நோட்டுகள் மட்டுமே கையிருப்பு உள்ளது. இதனால் பொது மக்கள் சிரமத்துக்குள்ளாவதை நாங்கள் அறிவோம்.
பணம் புழக்கம் அதிகரிக்க வங்கிக்கு அனுப்ப வேண்டிய பணத்தின் அளவை உயர்த்த வேண்டும், ரூ.500 நோட்டுகளை அதிகளவில் விட வேண்டும். அப்படி இல்லையென்றால் இந்த நிலை சீராக மூன்று மாதங்களாகும்.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top