தீக்கதிர் : தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி யில் ஆவணம் சாலையில் பெரியகுளம் பெட்ரோல் பங்க் முதல் செங்கமங்கலம் கடைவீதி வரை உள்ள சாலை மிகவும் பழுதடைந்து, போக்குவரத்திற்கு பயனற்றதாக உள்ளது என்றும் அதனை உடன டியாக சீரமைக்க வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் பெட்ரோல் பங்க் முதல் செங்கமங்கலம் கடைவீதி வரை சுமார் 2 கி.மீ தொலைவிற்கு புதிய சாலைப் பணிக்காக ஒப்பந்தம் விடப்பட்டும், ஒப்பந்ததாரர் பணியை தொடங்காமல் இருப்பதாகவும் பல்வேறு தரப்பில் இருந்தும் புகார்கள் எழுந்தன. உடனடியாக பணிகள் தொடங்கப்படாவிட்டால் சாலைமறியல் நடத்தப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து தீக்கதிரிலும் விரிவான செய்தி வெளி யாகி இருந்தது.இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சாலைப்பணி தொடங்குவதற்காக ஜல்லிக் கற்கள் கொண்டு வந்து கொட்டப்பட்டன. மேலும் சாலைகளை இயந்திரங்கள் மூலமாக கீறி போடப்பட்டன. தற்போது மீண்டும் பணிகளை தொடராமல், அரைகுறையாக நிறுத்தி விட்டனர்.இதனால் சாலையில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் சறுக்கி விழுவதும், காயமடைவதும், வாகன ங்கள் பஞ்சர் ஆவதும், பழுதடைவதும் தொடர்கதையாக உள்ளது.இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பேராவூரணி ஒன்றியச் செயலாளர் ஏ.வி.குமாரசாமி கூறுகையில்," மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலைப்பணிகளில் அலட்சியம் காட்டும் ஒப்பந்ததாரர் மீதும், கண்டு கொள்ளாத நெடுஞ்சா லைத் துறை அலுவலர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலைப்பணிகள் தாமதமாகும் பட்சத்தில் மக்களை திரட்டி சாலை மறியல் நடத்தப்படும்" என்றார்.
நன்றி : தீக்கதிர்