பேராவூரணி வட்டாரத்தில் விதை கிராம திட்ட பயிற்சி ஒட்டங்காடு ஊராட்சியில் நடைபெற்றது. பயிற்சிக்கு வேளாண்மை உதவி இயக்குநர் ஈஸ்வர் தலைமை வகித்தார். ஒட்டங்காடு ஊராட்சியைச் சேர்ந்த மற்றும் அம்மா பண்ணை மகளிர்குழு மற்றும் விதை பண்ணை விவசாயிகள் 40 பேர் பயிற்சியில் கலந்து கொண்டனர். வேளாண்மை துணை இயக்குநர் மத்திய திட்டம் இளஞ்செழியன் மத்திய திட்டங்கள் மூலம் விவசாயிகளுக்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து பேசினார்.
வேளாண்மை அலுவலர் ராணி நேரடி நெல்விதைப்பு முறைகள், பயிர் பாதுகாப்பு முறைகள் மற்றும் பிரதம மந்திரியின் புதிய பயிர் காப்பீட்டு திட்டம் பற்றி விவசாயிகளுக்கு விளக்கி காப்பீட்டு திட்ட படிவங்களை வழங்கினார்.
விதைச் சான்று உதவி இயக்குநர் பாலசரஸ்வதி, விதைசான்று அலுவலர் ஆனந்தபிரியா ஆகியோர் விதைப்பண்ணை அமைக்கும் முறை பற்றியும், கலவன் எடுக்கும் முறை பற்றியும் விளக்கினர்.
செயல்விளக்கங்கள் மற்றும் கண்காட்சி அமைக்கப்பட்டு விவசாயிகளுக்கு விளக்கமளிக்கப்பட்து. வேளாண்மை உதவி இயக்குநர் ஈஸ்வர், விதை கிராம திட்டத்தின் நோக்கம் மற்றும் விதையினை சேமிக்கும் பழக்கத்தினை விவசாயிகள் மேற்கொள்ள வேண்டியதின் அவசியம் குறித்து விளக்கினார். ஏற்பாடுகளை அட்மா தொழில்நுட்ப மேலாளர் சுரேஷ், தமிழழகன் வேளாண்மை உதவி அலுவலர் சாந்தஷீலா ஆகியோர் செய்திருந்தனர்.
நன்றி : தினகரன்